Posts

How to buy a good quality crab? And health benefits of the Crabs

Image
நல்ல தரமான நண்டுகளை வாங்குவது எப்படி? அசைவ உணவு  வகைகளில் பெரும்பான்மையான மக்கள் நண்டு பிரியர்களாக இருப்பார்கள். நாம் விரும்பி உண்ணும் நண்டில் உள்ள வகைகளையும் சரியான நண்டினை தரம் பார்த்து எப்படி வாங்குவது என்பதையும் இந்த பதிவில் காண இருக்கின்றோம்.  ஆண், பெண் நண்டுகள்: நண்டில் என்ன ஆண் நண்டு, பெண் நண்டு?  நாம் வழக்கமாக கடைகளில் சென்று சின்ன நண்டு அல்லது பெரிய நண்டு என்று தானே கேட்டு வாங்குகின்றோம் என்று யோசிப்பவர்கள் இதை சற்று படித்து தெரிந்துகிள்ளுங்கள்.   அதற்காக பெண் நண்டு எப்படி பாத்து வாங்குவது என்று முதலில் கேட்டால் ஒருவேளை நீங்களும் என்னைமாதிரி ஒரு 90s கிட்ஸ் ஆக இருக்கலாம். மேலே  உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும். ஆண் நண்டை வாங்கி திருப்பி பின் பகுதியை பார்க்கும்போது அதில் உள்ள ஓடு வயிற்று பகுதியோடு ஓட்டி இருக்கும். அதுவே பெண் நண்டை வாங்கி அதன் பின்பகுதியை திருப்பி பார்த்தால் அதன் பிற்பகுதியில் உள்ள ஓடு போன்ற அமைப்பினை நம் கைகளால் வெளியே எடுக்க முடியும். பெண் நண்டு தனது முடடைக்காய் வைத்து அடைகாக்க இந்த ஓடு அமைப்பு பயன்படுகிறது. ஆகையால் பின்பகுதி உடம்போடு ஒட்டி இருந்தால்